Thursday, 19 March 2015

கோலியை கிண்டலடித்த வங்காள தேச வீரர் ரூபல் ஹூசைன் கண்டுகொள்ளாத கோலி

வீராட் கோலியின் காதலி அனுஷ்கா நடித்து வெளியான என்.எச்.10 திரைப்படத்தை பார்த்துவிட்டு, என் லவ் அனுஷ்கா சூப்பரா நடித்துள்ளார் என்று டிவிட்டரில் கோலி கமெண்ட் போட்டுள்ளார்.இவர் படம் பார்த்தது நேற்று முன்தினம் இரவு. உடனடியாக டிவிட்டரில் கமெண்ட் போட்டதுடன், இன்ஸ்டாகிராமில் போட்டோவையும் ஏற்றிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று வங்காளதேசத்திற்கு எதிரான இன்றைய கால் இறுதி போட்டியில் வீராட் கோலி 3 ரன்களில் அவுட ஆனார்.

தவான் அவுட் ஆனதும், விராட் கோலி பேட் செய்ய மைதானத்திற்குள் வந்தபோதே, வங்கதேச பவுலர் ரூபல் அவரிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு சிரித்தார். இதை பார்த்த ரசிகர்களும், ஏதோ பழைய நண்பர்கள் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்போல என நினைத்துக் கொண்டனர்.17.4-வது ஓவரில் ரூபல் ஹுசைனின் பந்துவீச்சை எதிர்கொண்ட கோலி 3 ரன்களில் அவுட் ஆனார். ஹுசைன் பந்துவீச்சில் கோலி ஷாட் அடித்தபோது விக்கெட் கீப்பர் ரஹிம் கேட்ச் பிடித்தார். கோலி 8 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

கோலி அவுட் ஆனதும், ரூபல் அவரை நோக்கி ஆக்ரோஷமாக எதையோ சொல்லியபடி கத்தினார். நெஞ்சை நிமிர்த்தி திமிறியபடி நின்ற அவரை சக வீரர்கள் சேர்ந்து பிடித்து வைத்தனர். அவரது நடவடிக்கைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தன. ஆனால், கோலிஇதை கண்டு கொள்ளாமல் பெவிலியனை நோக்கி நடந்து சென்றார்.
வீடியோ இணைப்பு


Friday, 27 February 2015

ஒரே நாளில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி டி20 தொடரை கைப்பற்றி சாதனை

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரை இந்திய ஆடவர் அணியும் மற்றும் பெண்கள் அணியும் ஒரே நாளில் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா பெண்கள் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். அதே போல தோணி தலைமையிலான இந்திய ஆடவர் அணியும் ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றினர். 

இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணியும் ஒரே நாளில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி இந்திய அணி டி20 போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.
world cup 2015 problem that won go away CLICK THIS BANNER TO WATCH THIS VIDEO